Published:Updated:

சென்னை: மனைவி கிண்டல்; கணவருக்குக் கொலை மிரட்டல் - கூட்டாளியுடன் ரௌடி கைது

கொலை மிரட்டல் வழக்கில் கைதான ஏழுமலை

வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்த பெண்ணைக் கிண்டல் செய்த தகராறில் கூட்டாளியுடன் ரௌடி ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: மனைவி கிண்டல்; கணவருக்குக் கொலை மிரட்டல் - கூட்டாளியுடன் ரௌடி கைது

வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்த பெண்ணைக் கிண்டல் செய்த தகராறில் கூட்டாளியுடன் ரௌடி ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கொலை மிரட்டல் வழக்கில் கைதான ஏழுமலை

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரி (26) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவர் ஜன.15-ம் தேதி வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற இரண்டு இளைஞர்கள் சுந்தரியைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். அதை சுந்தரி, தட்டிக் கேட்டிருக்கிறார். அதனால் இளைஞர்கள் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். சத்தம் கேட்டு வெளியில் வந்த சுந்தரியின் கணவர் இளைஞர்களிடம், `ஏன் என் மனைவியைக் கிண்டல் செய்கிறீர்கள்’ எனத் தட்டிக் கேட்டிருக்கிறார்.

டில்லிபாபு
டில்லிபாபு

உடனே அருகிலிருந்த டியூப் லைட்டை எடுத்த இளைஞர்களில் ஒருவன், சுந்தரியின் கணவருக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து சுந்தரி, கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில் சுந்தரியிடம் தகராறில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை (20), டில்லிபாபு (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர். ஏழுமலை மீது ஒரு வழிப்பறி வழக்கு இருக்கிறது. மேலும் டில்லிபாபு, கொருக்குப்பேட்டை சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. இவர்மீது ஒரு கொலை முயற்சி உட்பட எட்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. விசாரணைக்குப்பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.