Published:Updated:

ஈரோடு: ஓடும் ரயிலில் நகையைத் திருடி பயணிகளிடம் சிக்கிய இளைஞர்கள் - 7 பவுன் நகை, ரொக்கம் மீட்பு

பிடிபட்ட இளைஞர்களுடன் ரயில்வே போலீஸார்.

ஈரோட்டில் ஓடும் ரயிலில் திருட்டில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை ரயில்வே போலீஸார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து ஏழு பவுன் நகையைப் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு: ஓடும் ரயிலில் நகையைத் திருடி பயணிகளிடம் சிக்கிய இளைஞர்கள் - 7 பவுன் நகை, ரொக்கம் மீட்பு

ஈரோட்டில் ஓடும் ரயிலில் திருட்டில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை ரயில்வே போலீஸார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து ஏழு பவுன் நகையைப் பறிமுதல் செய்தனர்.

Published:Updated:
பிடிபட்ட இளைஞர்களுடன் ரயில்வே போலீஸார்.

சென்னை எக்மோர் பகுதியைச் சேர்ந்தவர் மரியம்மா ஜான் (65). இவர் சென்னை- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருவனந்தபுரத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு அருகே வந்தபோது கழிப்பறைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தன் இருக்கைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இருக்கையில் வைத்திருந்த பையில் இருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு இரண்டு பேர் ஓடினர். இதைக் கண்ட மரியம்மா ஜான், `திருடன்...’ எனக் கூச்சலிட்டார். அப்போது அங்கிருந்த பயணிகள் சிலர் அந்த இரண்டு பேரையும் துரத்திப் பிடித்து அவர்கள் வைத்திருந்த கைப்பையை பறித்ததுடன், இருவரையும் நையப்புடைத்தனர்.

இதையடுத்து ரயில்வே போலீஸாருக்குத் தகவல் அளிக்கவே, அங்கு வந்த போலீஸார் இருவரையும் பிடித்து உரிய முறையில் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த ராஜா (25), கரூரைச் சேர்ந்த கணேஷ்குமார் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் திருடிச் சென்ற கைப்பையில் ஏழு பவுன் தங்கச்சங்கிலியும், ரூ.5,000 ரொக்கப்பணமும், செல்போனும் இருந்தது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட நகைகள், செல்போன்.
கைப்பற்றப்பட்ட நகைகள், செல்போன்.

ரயில் பயணத்தின்போது நகைகளை அணிய வேண்டாம் என்று கருதி, அவற்றைக் கழற்றி கைப்பையில் மரியம்மா ஜான் வைத்திருந்தார். இதை அறிந்த அந்த இரு திருடர்களும் நைசாக கைப்பையுடன் எஸ்கேப்பாகப் பார்த்துள்ளனர். ஆனால் அதற்குள் சக பயணிகளிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இருவரையும் ஈரோடு ரயில்வே போலீஸார் கைதுசெய்து அவர்களிடமிருந்து ஏழு பவுன் நகைகளையும், ரூ.5,000 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைதான இருவர் மீதும் ஏற்கெனவே திருச்சி, கரூர் பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.