Published:Updated:

மும்பை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : 4 பேர் பலி

மும்பை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : 4 பேர் பலி
மும்பை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : 4 பேர் பலி

மும்பை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : 4 பேர் பலி

மும்பையில், மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : 4 பேர் பலி


 

மும்பையில் உள்ள பிந்தி பஜார் பகுதியில், இன்று காலை மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த  நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை எட்டுப் பேரை மீட்டுள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.


மும்பையில் கட்டடம் இடிந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை நான்கு இடங்களில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம், மும்பை கட்கோபர் பகுதியிலுள்ள நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். மும்பையில் பழைய கட்டடங்களின் எண்ணிக்கை அதிகம் என்றும், அவை இடிந்து விழும் தருவாயில் இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் மும்பைவாசிகள் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.  

அடுத்த கட்டுரைக்கு