Published:Updated:

வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்: மூன்று பேர் பலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்: மூன்று பேர் பலி!
வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்: மூன்று பேர் பலி!

வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்: மூன்று பேர் பலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஹைதராபாத்தில் நேற்று பெய்த கனமழையால், நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

ஹைதராபாத்தில் நேற்று மாலை பெய்த மழையால், நகரம் முழுவதும் வெள்ளம் நிறைந்து காணப்படுகிறது. நகரின் முக்கியச் சாலைகள் எங்கும் மழைநீர் பெருகி ஓடியதால், வெள்ளம் வடிய வாய்ப்பே அமையவில்லை. மழையும் விடாது பெய்துகொண்டிருந்ததால், மின்சாரம், போக்குவரத்து ஆகிய அடிப்படைச் சேவைகள் முடக்கப்பட்டன. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளூர் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கனமழையால், பல இடங்களில் மின் வயர் அறுந்துவிழுந்தன. இதில், மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார். மேலும், கனமழைக்கு பல இடங்களில் வீடுகள் சேதமடைந்து, கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. இதில், ஒரு குழந்தை உட்பட இருவர் பலியாகினர். நேற்று மாலை  மட்டும் ஹைதராபாத்தில் சுமார் 67.6 செ.மீ மழை பதிவானதாகக் கூறப்பட்டுள்ளது. கடும் வெள்ளப் பாதிப்பால், மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளிலும் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு