Published:Updated:

ராமேஸ்வரம் அருகே 6 பேர் எரித்துக் கொலை?

ராமேஸ்வரம் அருகே 6 பேர் எரித்துக் கொலை?
ராமேஸ்வரம் அருகே 6 பேர் எரித்துக் கொலை?
ராமேஸ்வரம் அருகே 6 பேர் எரித்துக் கொலை?

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இன்று, ஒரு மீனவர் குடிசையில் தீப்பிடித்ததில் 6 பேர் கருகி இறந்த நிலையில்,அவர்கள் முன்விரோதம் காரணமாக  எரித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அடுத்த தோப்பு வலசை பகுதியைச் சேர்ந்த கருப்பையா  (62).இவரது மகள் காளிமுத்து (32).காளிமுத்துவின் கணவர் கள்ளழகர் வெளிநாட்டில்  ‌வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை இவர்களது குடிசை திடீரென தீப்பிடித்தது.இதில்  கருப்பையா, காளிமுத்து, குழந்தைகள், காவேரி (12), பாலமுருகன் (10),  சரண்யா (9), சக்தி (2) ஆகியோர் உடல் கருகி பலியாயினர்.

##~~##
இந்த சம்பவம் விபத்தா அல்லது கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் தோப்புவலசை பகுதியில் 5 செண்ட் நிலம் தொடர்பாக இரு  தரப்பு இடையே பிரச்னை இருந்து வந்தது.
இதன் காரணமாக எதிர்தரப்பினர் குடிசைக்கு தீ வைத்து,அவர்களை  எரித்துக்கொன்றிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வீட்டின் வெளித்தாழ்ப்பாள் குச்சி வைத்து அடைக்கப்பட்டுள்ளதால்,அவர்கள்  எரித்துக்கொல்லப்பட்டதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும்,இருப்பினும் இது குறித்து  தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.