Published:Updated:

சாமியார் பிரேமானந்தா காலமானார்

சென்னை, பிப்.21,2011

சாமியார் பிரேமானந்தா காலமானார்

இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் பிரேமானந்தா சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கற்பழிப்பு, கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார் புதுக்​கோட்டை சாமியார் பிரேமானந்தா.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உயி​ருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் தவித்தார்.

தனது சொந்த செலவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்கும்படி சிறைத் துறை அதிகாரிகளுக்கும், உள்துறை செய​லாளருக்கும் மனு கொடுத்தும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான உத்தரவு பெற்றார்.

சிகிச்சை முடிந்து சிறை திரும்பிய பிரேமானந்தாவுக்கு தொடர்ந்து பராமரிப்புக்கு வழியின்றிப் போகவே, மீண்டும் உடல்நிலை மோசமானது.

கடந்த நவம்பர் மாதம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நவம்பர் 8-ம் தேதி இருந்து  மீண்டும் சிறையில் அடைக்​கப்​பட்டார்.

இந்நிலையில், உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேமானந்தா, சிகிச்சைப் பலனின்றி இன்று மதியம் மரணமடைந்தார்.