Published:Updated:

நெல்லை: கொலை வழக்கில் 2 பேருக்கு 4 தூக்குத் தண்டனை!

நெல்லை: கொலை வழக்கில் 2 பேருக்கு 4 தூக்குத் தண்டனை!
நெல்லை: கொலை வழக்கில் 2 பேருக்கு 4 தூக்குத் தண்டனை!
நெல்லை: கொலை வழக்கில் 2 பேருக்கு 4 தூக்குத் தண்டனை!

நெல்லை: கொலை வழக்கில் இரண்டு பேருக்கு 4 தூக்குத் தண்டனைகள் விதித்து  நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழகருவேலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்.

இவரது மனைவி சண்முகத்தாய் மற்றும் மகள்கள் புவனேஸ்வரி, இந்திரா ஆகியோர் கடந்த 2007 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக கிருஷ்ணன்,காட்டு ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

##~~##
கிருஷ்ணனின் மனைவியுடன் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், காட்டுராஜாவுடன் சேர்த்து ஜெயக்குமார் குடும்பத்தை கொலை செய்தார்.
இது தொடர்பான வழக்கு நெல்லை குற்றவியல் 2 ஆவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிகள் கிருஷ்ணன்,காட்டு ராஜா ஆகியோர் மீதான குற்றம் நிரூபணமானதால், அவர்களுக்கு 4 தூக்குத் தண்டனைகள் மற்றும் 5 ஆயுள் தண்டனைகள் விதிப்பதாக நீதிபதி நந்தகுமார் பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.