Published:Updated:

`17 மாதங்களில் 12,223 மரணம்'- வெளிநாடுவாழ் இந்தியர்களை அச்சப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல்

அப்படிச் செல்பவர்கள் தங்களின் சொந்த பந்தங்களை விட்டு கஷ்டப்படுவதையும் வேலை பார்த்துவருவதையும், அவர்கள்படும் துன்பங்கள் குறித்தும் அவ்வப்போது கேள்விப்பட்டிருப்போம்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள்
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ( twitter )

வெளிநாடு எப்போதும் இந்தியர்களுக்கு கனவு மட்டுமல்ல... தங்களின் சந்ததிகளைக் காப்பாற்றுவதற்கான இடமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நிலவும் வேலையின்மை, ஊதியக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகப் புலம்பெயர்வது அன்றாட நிகழ்வாக மாறிப்போய்விட்டது. அப்படிச் செல்பவர்கள் தங்களின் சொந்த பந்தங்களை விட்டு கஷ்டப்படுவதையும் வேலை பார்த்துவருவதையும், அவர்கள்படும் துன்பங்கள் குறித்தும் அவ்வப்போது கேள்விப்பட்டிருப்போம்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள்
வெளிநாடுவாழ் இந்தியர்கள்
twitter

இப்போது அது செய்தியல்ல. அதையும் தாண்டி நடந்திருக்கும் சம்பவம் ஆர்டிஐ மூலம் வெளிவந்து அதிரவைத்திருக்கிறது. மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் ஆர்வலர் ஜடின் தேசாய். இவர் சமீபத்தில் உள்துறை அமைச்சகத்திடம் 2018 ஜனவரி முதல் 2019 ஜூன் வரையிலான 18 மாத காலப்பகுதியில் வெளிநாட்டு சிறைகளில் இறந்த இந்தியர்கள் மற்றும் இந்திய சிறைகளில் இறந்த வெளிநாட்டவர்கள் குறித்த விவரங்களை ஆர்டிஐ மூலம் கேட்டிருந்தார்.

`வெளிநாடு பறக்கும் நேரத்திலா இந்தச் சோதனை!'- மனம் நொந்த விஜயபாஸ்கர்

இவரின் கோரிக்கை வெளிவிவகாரத்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் பதில் கொடுக்கப்பட்டிருந்தது. அதில்தான் அந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில், ஆச்சர்யப்படும் விதமாக, தேசாய் கேட்டிருந்த காலகட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் எத்தனை இந்திய கைதிகள் இறந்தார்கள் என்பது குறித்தும், இந்திய சிறைகளில் இறந்துபோன வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் இல்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சகம் பதில் கொடுத்த அதேநேரத்தில், தேசாய் குறிப்பிட்டிருந்த 2018 ஜனவரி முதல் 2019 மே வரையிலான 17 மாதங்களில் 12,223 இந்தியர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளது.

வெளிவிவகாரத் துறை
வெளிவிவகாரத் துறை
twitter

எனினும் அவர்களின் விவரங்கள், எதற்காக இறந்தார்கள், எந்த நாட்டில் அதிக இறப்பு உள்ளிட்ட எந்த விவரங்களையும் குறிப்பிடாமல் இந்த ஒற்றைத் தகவலை மட்டும் MEA அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் இல்லாத வகையில் இந்த 17 மாதங்களில் மட்டும் 12,223 இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இதுகுறித்து ஐஏஎன்எஸ் தளத்துக்கு பேசியுள்ள தேசாய், ``இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் இறந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.

Vikatan

நோய்கள், விபத்துகள், வெளிநாட்டு நாடுகளில் நிகழும் தாக்குதல்கள் அல்லது மருத்துவ பற்றாக்குறை காரணமாக அவர்கள் உயிர் இழந்தார்களா என்பதையும், அவை போதுமான காப்பீடு செய்யப்பட்டதா, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களின் உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டபோது இயற்கைக்கு மாறான மரணங்கள் போன்றவை எதுவும் தென்பட்டதா என்பது குறித்த தகவல்களையும் சேகரிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக இன்னொரு ஆர்டிஐ விண்ணப்பிக்க முடிவெடுத்துள்ளேன்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள்
வெளிநாடுவாழ் இந்தியர்கள்
twitter

இந்தியர்கள் எந்த மாநிலங்களிலிருந்து பயணம் செய்தார்கள், எந்த நோக்கத்துக்காக எந்த காலத்தில் சென்றார்கள், அவர்கள் எந்த வகையான உதவிகளைப் பெற்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்தப் புள்ளி விவரங்கள் வெளிவர வேண்டும் எனக் கேட்கிறேனென்றால் இந்தியர்கள் சாதாரணமாக வெளிநாடு சென்றுவிட முடிவதில்லை.

இரண்டு கோடி பேர் இனி இந்தியர்கள் இல்லை?

ஒவ்வொருவரும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செல்கிறார்கள். ஒவ்வொரு இந்தியரின் வெளிநாட்டுப் பயணத்திலும் ஏஜென்டுகள், ஏஜென்சிகள் பங்குகள் அதிகம். மேலும், இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கிக்கொள்கிறார்களா என்பதையும் இனிமேல் வரவுள்ள புள்ளிவிவரங்களை வைத்துதான் கணக்கிட முடியும்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள்
வெளிநாடுவாழ் இந்தியர்கள்
twitter

இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்படும் பட்சத்தில் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்க முடியும்" எனக் கூறியவர் நடந்து வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தேசாய் கூறியதுபோலவே வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன்களில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Vikatan