Published:Updated:

மண் சரிவில் விழுந்து இறந்த கலிங்கப்பட்டி ராணுவ வீரர் - கலங்கிய வைகோ

பி.ஆண்டனிராஜ்

கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்ற ராணுவ வீரர், அசாமில் பணியில் இருந்தபோது உயிரிழந்தது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மண் சரிவில் விழுந்து இறந்த கலிங்கப்பட்டி ராணுவ வீரர் - கலங்கிய வைகோ
மண் சரிவில் விழுந்து இறந்த கலிங்கப்பட்டி ராணுவ வீரர் - கலங்கிய வைகோ

கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்ற ராணுவ வீரர், அசாமில் பணியில் இருந்தபோது உயிரிழந்தது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மண் சரிவில் விழுந்து இறந்த கலிங்கப்பட்டி ராணுவ வீரர் - கலங்கிய வைகோ

வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் செல்வகுமார். இவர் இந்திய ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமண்டில் பீரங்கிகளை இயக்குகிற ஹவில்தாராகப் பணியாற்றி வந்தார். அசாம் மாநிலத்தில் பணியாற்றி வந்த இவர், ஏப்ரல் 22-ம் தேதி அதிகாலையில், தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கைக்காகச் சென்ற வாகனம், மழை மற்றும் மண் சரிவில் உருண்டு ஆற்றில் விழுந்ததில் உயிரிழந்தார். 

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், `கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் சென்ற வாகனம் மண் சரிவில் சிக்கி உருண்டு விழுந்ததாகவும் அதிலிருந்த சில வீரர்கள் உயிர் தப்பி கரை சேர்ந்தார்கள் என்றும் செல்வகுமார் என்ன ஆனார் என்று தெரியவில்லை எனவும் செல்வகுமார் குடும்பத்தினர் எனக்குத் தெரிவித்தனர். உடனடியாக நான் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை அலைபேசியில் தொடர்புகொண்டு செல்வகுமாரைக் காப்பாற்றுகிற முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டினேன். 

அவரும் உடனடியாக அசாமில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பியதை எனக்குத் தெரிவித்தார். ஆனால், செல்வகுமார் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் தற்போது ராணுவ மருத்துவமனையில் இருக்கிறது என்ற செய்தியை அமைச்சர் என்னிடம் கூறினார். இன்று காலையில் சீன தேசம் சென்ற ராணுவ அமைச்சர் பிற்பகலில் அங்கிருந்து அலைபேசியில் என்னை தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தார். அசாமில் உள்ள ராணுவ அதிகாரிகளிடம் நானும் பேசினேன்.

செல்வகுமாரின் சடலத்தைத் திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் அனுப்பி வைப்பதாகவும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேரும் என்றும் அங்கிருந்து புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கலிங்கப்பட்டிக்குக் கொண்டுவந்து ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். செல்வகுமாருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவனை இழந்த அந்தச் சகோதரிக்கும் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கும் பெற்றோர், உற்றார் உறவினருக்கும் ம.தி.மு.க சார்பில் கண்ணீர் அஞ்சலியைக் கூறுவதோடு, 25-ம் தேதி காலை செஞ்சி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, இறுதிச் சடங்குகளில் பங்கேற்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.