Published:Updated:

வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்கால தடை!

Vikatan Correspondent
வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்கால தடை!
வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்கால தடை!
வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்கால தடை!

புதுடெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் இம்மாதம் 20 ஆம் தேதி வரை தூக்கிலிட உச்ச நீதிமன்றம்,  இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு வனப்பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு    நடந்த குண்டு வெடிப்பில் போலீசார் உட்பட 22 பேர் பலியானார்கள். இந்த வழக்கில்    முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அண்மையில்   நிராகரித்ததால், அவர்கள் எந்த நேரமும் தூக்கிலிடப்படும் நிலை ஏற்பட்டது.

அதே சமயம் இவர்களை தூக்கிலிட தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் கடும்   எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

##~~##
இதனிடையே இவர்கள் நான்கு பேருக்கும் ஞாயிற்றுக்கிழமையன்று  தூக்குத்தணடனையை நிறைவேற்ற  கர்நாடக அரசு முடிவு செய்யப்பட்டிருந்ததாக ஒரு  தகவல் வெளியானதால், அச்சம் காரணமாக 4 பேரது உறவினர்களும், தூக்கு  தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை எதிர்த்து  மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். மேலும் மனுவை உடனடியாக விசாரிக்க  வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.
வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்கால தடை!

ஆனால், அவசர விசாரணைக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி, உடனடியாக விசாரிக்க முடியாது எனக்கூறி அம்மனுவை ஏற்க  உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் சார்பில் வழக்கறிஞர் சமீக் நரேன்  இன்று  காலைஉச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், " வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் மீதான குற்றச்சாட்டு பற்றி மறு விசாரணை நடத்த வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் தொடர்புடையவர்களின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து மறு விசாரணை நடத்த முன் உதாரணங்கள் உள்ளன. எனவே வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு  தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த  நீதிபதிகள், அல்டமாஸ் கபீர், ஏ.ஆர்.தவே, விக்ரம்ஜித் சென் மூவரும், "வருகிற 20 ஆம் தேதி புதன்கிழமையன்று  இந்த மனு மீதான விசாரணை நடைபெறும். அதுவரை வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் தூக்கிலிட கூடாது'' என்று இடைக்கால தடை விதித்தனர்.

 வருகிற 20 ஆம் தேதியன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அப்போது வீரப்பன் கூட்டாளிகளின் உறவினர்களின் சார்பில் விரிவான மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம மேல்முறையீடு மனு மீது இறுதி தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.