Published:Updated:

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு தேதி இன்று அறிவிக்கப்படும்?

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு தேதி இன்று அறிவிக்கப்படும்?
வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு தேதி இன்று அறிவிக்கப்படும்?
வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு தேதி இன்று அறிவிக்கப்படும்?

பெல்காம்: மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கும்  நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், தூக்கு தேதியை மைசூர்  நீதிமன்றம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக கர்நாடக சிறைத்துறை கூடுதல்  டி.ஜி.பி. கே.வி.ககன்தீப் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி, சந்தன  கடத்தல்  வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் சார்பில் தாக்கல் செய்ய்யப்பட்ட மனுவை உடனடியாக  விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.இந்நிலையில் இம்மனு இன்று விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு தண்டனை தொடர்பாக அதிகாரப்பூர்வ  உத்தரவு எதுவும், அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பெல்காம் சிறைச்சாலைக்கு இதுவரை  வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

##~~##
இந்நிலையில் சிறைச்சாலையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளுக்கு இன்று மருத்துவ  சோதனை நடத்தப்பட்டது.இது குறித்த செய்தி பரவியதால், சிறை வளாகத்திற்கு  வெளியே ஏராளமான பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் குவிந்தததால் பரபரப்பு  ஏற்பட்டது.
இதனிடையே இதுகுறித்து தெரிவித்த மருத்துவர், தூக்கு தண்டனையை எதிர்நோக்கி  இருக்கும் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை  வழக்கமானது தான் என்று தெரிவித்தார்.
மேலும், 4 பேரின் தூக்கு தொடர்பாக வெளியான தகவல் தவறானது என்றும், அவர்களை  தூக்கிலிடுவது தொடர்பாக அதிகாரபூர்வ உத்தரவு எதுவும் இதுவரை வரவில்லை என்றும்  கூறினார்.

மாஜிஸ்திரேட் 
அறிவிப்பார்
இதனிடையே தூக்கிலிடப்படும் தேதியை மைசூர் மாஜிஸ்திரேட் இன்று அறிவிப்பார்  என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை கூடுதல்  டி.ஜி.பி. கே.வி.ககன்தீப் கூறுகையில், "வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும்  தேதியை மைசூர் நீதிமன்றம் முடிவு செய்யும். இது தொடர்பாக மைசூர் கோர்ட்டில்  மனுதாக்கல் செய்வோம். திங்கட்கிழமையன்றே தேதியை முடிவு செய்து நீதிமன்றம்  அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தயார்  நிலையில் உள்ளன. கோர்ட் உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்" என்றார்.