Published:Updated:

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனைக்கு தடை நீட்டிப்பு!

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனைக்கு தடை நீட்டிப்பு!
வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனைக்கு தடை நீட்டிப்பு!
வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனைக்கு தடை நீட்டிப்பு!

புதுடெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் தூக்கிலிட விதித்த தடையை உச்ச  நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளிகள் சார்பில்  திருத்தியமைக்கப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபு சுப்ரமணியன் இந்த மனுவை தாக்கல்  செய்தார். குற்றவாளிகள் ஞானப்பிரகாசம், சைமன், பிலவேந்திரன், மாதையன் SC extends stary on death sentence of Veerapan associatesஆகியோர்  கையெழுத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதே ரீதியான  புல்லர் வழக்கில் தீர்ப்பு வரும் வரை வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் தூக்கிலிட தடை  விதிப்பதாக இன்று அறிவித்தது. 

இவர்கள் 4 பேரது மனுவும் 6 வார காலத்திற்கு பின்னர் விசாரணைக்கு பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.