Published:Updated:

மதுரையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மதுரையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மதுரையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மதுரையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 மதுரை: மதுரை மாவட்டம் இடையபட்டியில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டோரி கடுவால் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் சிங். இவர் மதுரை மாவட்டம் இடையபட்டியில் இந்தோ திபெத் எல்லை காவல் படை உதவி சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், விக்ரம் சிங் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது சொந்த ஊருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படும் என இந்தோ திபெத் எல்லை படையினர் தெரிவித்தனர்.