Published:Updated:

மாணவி திடீர் மரணம்: பள்ளி முற்றுகை

மாணவி திடீர் மரணம்: பள்ளி முற்றுகை
மாணவி திடீர் மரணம்: பள்ளி முற்றுகை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகில் உள்ளது புதுவேட்டைக்குடி கிராமம். இந்த ஊரில் சரஸ்வதி வித்யாலாயா என்றொரு தனியார் பள்ளி இருக்கிறது.
 

மாணவி திடீர் மரணம்: பள்ளி முற்றுகை

இந்தப் பள்ளியில் அருகில் உள்ள தேனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சி, செல்வராணி மகள் கெளசல்யா தேவி விடுதியில் தங்கியவாறு, 6ஆம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாணவி மயக்கம் அடைந்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை வரவழைத்துள்ளது. பதறியடித்து மாணவியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர் பெற்றோர்கள்.
 

மாணவி திடீர் மரணம்: பள்ளி முற்றுகை

மருத்துவமனையில் மாணவி இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட, வெகுண்டெழுந்த கிராம மக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள்  இன்று காலை பெருந்திராளாக சென்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பெரம்பலூரில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

சி.ஆனந்தகுமார்

படங்கள்:எம்.ராமசாமி