Published:Updated:

புழல் சிறையில் கைதி தற்கொலை, உண்ணாவிரதம்

சென்னை: புழல் சிறையில் விசாரணைக் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கோரி கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நான்கு பேருக்கு ஜாமீன் கிடைத்தது. மீதம் உள்ள மூன்று பேரில் விசாரணைக் கைதியான சங்கர் என்பவரின் ஜாமீன் மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது.

##~~##
பிளார் 2-ல் விசாரணைக் கைதியாக இருந்த சங்கர், இதில் மிகவும் விரக்தி அடைந்தார். மனம் உடைந்த நிலையில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது, புழல் சிறையில் பெரும் பரபரப்பைக் உண்டாக்கி உள்ளது.
இந்த நிலையில், பிளாக் 2-ல் உள்ள விசாரணைக் கைதிகள் அனைவரும் 'சங்கர் தற்கொலை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கர் தற்கொலை செய்து கொண்டதைச் சேர்த்து இதுவரை கடந்த ஒரு வருடத்தில்  மட்டும் புழல் மத்திய சிறையில், 14 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.