Published:Updated:

மண் சரிந்து இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ராமதாஸ்

மண் சரிந்து இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ராமதாஸ்
மண் சரிந்து இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ராமதாஸ்
மண் சரிந்து இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ராமதாஸ்

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்து பலியான 4 பெண்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அப்பாவி பெண்கள் 4 பேரும் உயிரிழந்ததற்கு பட்டணம் ஊராட்சித் தலைவரும், அதிகாரிகளும் தான் காரணம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி ஏரி மற்றும் ஏரி கால்வாய்களை ஆழப்படுத்தும் பணிகளுக்காக சென்ற கிராம மக்களை, அந்த ஊரின் ஊராட்சித் தலைவரான முருகேசன் என்பவர் தாம் ஒப்பந்தம் எடுத்து செய்துவரும் கிணறு அமைக்கும் பணிக்காக கால்வாய் மணலை அள்ளும் பணியில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

ஆபத்தான குகை பகுதியில் மணல் எடுத்தால் , மணல் சரிந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வேலையை செய்யவிட்டால் இனி எந்த வேலையும் கிடைக்காது என்று மிரட்டி தமது சொந்த வேலையை செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இந்தப் பணியில் ஈடுபட்ட மக்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கூட அவர் செய்துதரவில்லை. இப்பணிகளை மேற்பார்வையிட வேண்டிய அதிகாரிகளும் இந்த அப்பட்டமான விதி மீறலை கண்டு கொள்ளவில்லை. எனவே 4 பேரின் உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

##~~##
இக்கோரிக்கையை வலியுறுத்தியும், உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு  ரூ. 5 லட்சம் இழப்பீடு  வழங்கும் வரை உடல்களை வாங்கமாட்டோம் என்று வலியுறுத்தியும் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் அதிகமான மக்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று காலை முதல் 24 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களின் போராட்டம் நீடிக்கும்போதிலும்,  அவர்களுடன் பேச்சு நடத்த அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரோ அல்லது மாவட்ட ஆட்சியரோ முன் வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
மக்களின் போராட்டங்களுக்கும் உணர்வுகளுக்கும் இந்த அரசு எந்த அளவுக்கு  மதிப்பு அளிக்கிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும். உயிரிழந்த பெண்கள் அனைவரும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.அவர்களின் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாடிக் கொண்டிருக்கின்றன .  அவர்கள் அனைவருக்குமே 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், இது அரசு கடமை தவறியதால் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு என்பதாலும் உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கவேண்டும். இந்த விபத்தில் காயமடைந்த இருவருக்கும் உயர்தர மருத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.