Published:Updated:

பவானி ஆற்றில் திடீர் வெள்ளம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலி

பவானி ஆற்றில் திடீர் வெள்ளம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலி
பவானி ஆற்றில் திடீர் வெள்ளம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலி

கோவை மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் இன்று காலை ரவிச்சந்திரன், அவரது  மனைவி ராணி, மகள் ராஜேஸ்வரி, பேரன் நிக்கி ஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன், அவரது  மனைவி ராணி, மகள் ராஜேஸ்வரி, பேரன் நிக்கி ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

##~~##
நீரில் மூழ்கி ரவிச்சந்திரன் உள்பட 4 பேரும் இறந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  ரவிச்சந்திரன், ராணி, ராஜேஸ்வரி உடல்களை மீட்டனர். நிக்கி உடலை தேடி பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.