Published:Updated:

குடித்துவிட்டு படகில் வந்த தொழிலாளி ஆற்றி்ல் விழுந்து பலி

குடித்துவிட்டு படகில்  வந்த தொழிலாளி ஆற்றி்ல் விழுந்து பலி
குடித்துவிட்டு படகில் வந்த தொழிலாளி ஆற்றி்ல் விழுந்து பலி

கடலூர்: கடலூர் அருகே சாராயம் குடிக்கச் படகில் தென்பெண்ணை ஆற்றை கடந்து சென்ற கட்டடத் தொழிலாளி படகில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
 

குடித்துவிட்டு படகில்  வந்த தொழிலாளி ஆற்றி்ல் விழுந்து பலி

கடலூர் - புதுச்சேரி எல்லை அருகே கடலூர் மாவட்டத்தின் வெளிச்செம்மண்டலம் மற்றும் புதுச்சேரியின் ஆராய்ச்சிக்குப்பம் ஆகிய ஊர்களுக்கு நடுவே சாராய தொழில் அமோகமாக நடக்கிறது.

சாராயத்தை குடிப்பதற்காக தென்பெண்ணை ஆற்றில் அக்கரையில் இருந்து வருவோரை இலவச படகு சர்வீஸ் நடத்தி வியாபாரத்தை ஜரூராக நடத்திக் கொண்டிருந்தார்கள் சாராய முதலாளிகள்.

இது குறித்து ஜூனியர் விகடனில் ஏற்கெனவே செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் இப்படி ஓர் அசம்பாவிதம் நடந்து இருக்கிறது.

##~~##
நேற்று மாலை கம்மியம்பேட்டையை சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ராமு என்பவர் சாராயம் குடிப்பதற்காக படகில் சென்று மூக்கு முட்ட சாராயம் குடித்துள்ளார். பின்பு அதே படகில் அவர் திரும்பும் போது நிதானம் தவறி படகில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து இறந்துவிட்டார்.
படகில் இருந்த மற்றவர்களும் குடிபோதையில் இருந்ததால் ராமுவை யாரும் காப்பாற்ற முடியவில்லை. விரைவில் சாராய வியாபாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கை!
கரு.முத்து