Published:Updated:

லாரி மோதி மாணவி பலி: டிரைவரை ஓட ஓட விரட்டி அடித்து உதைத்த மாணவர்கள் ( படங்கள்)

லாரி மோதி மாணவி பலி: டிரைவரை ஓட ஓட விரட்டி அடித்து உதைத்த மாணவர்கள் ( படங்கள்)
லாரி மோதி மாணவி பலி: டிரைவரை ஓட ஓட விரட்டி அடித்து உதைத்த மாணவர்கள் ( படங்கள்)

சென்னை: சென்னை: சென்னையில் டேங்கர் லாரி மோதி கல்லூரி மாணவி பலியானதால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

லாரி மோதி மாணவி பலி: டிரைவரை ஓட ஓட விரட்டி அடித்து உதைத்த மாணவர்கள் ( படங்கள்)

மேடவாக்கத்தை சேர்ந்த மாணவி சுகன்யா, தனது தாயாருடன்  இருசக்கர வாகனத்தில் இன்று காலை கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்.

சிட்லபாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தை டேங்கர் லாரி முந்தி செல்ல முயன்றபோது, மாணவி சுகன்யா மீது மோதியது. இதில் மாணவி சுகன்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தாயார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
 

லாரி மோதி மாணவி பலி: டிரைவரை ஓட ஓட விரட்டி அடித்து உதைத்த மாணவர்கள் ( படங்கள்)

இதையடுத்து, லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், லாரி டிரைவரை ஓட ஓடவிட்டி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் டிரைவரை கைது செய்தனர்.

லாரி மோதி மாணவி பலி: டிரைவரை ஓட ஓட விரட்டி அடித்து உதைத்த மாணவர்கள் ( படங்கள்)

மாணவி சுகன்யா, அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இதனிடையே, இந்த விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு லாரி ஒன்று, போக்குவரத்து காவலரின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறையினர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.

##~~##
இதனிடையே, தப்பியோடிய லாரி டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.