Published:Updated:

தானே பலி 74 ஆனது: அதிகாரி உள்பட 7 பேர் கைது

தானே பலி 74 ஆனது: அதிகாரி உள்பட 7 பேர் கைது
தானே பலி 74 ஆனது: அதிகாரி உள்பட 7 பேர் கைது

தானே: மகாராஷ்ட்ரா மாநிலம் தானேவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 74 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நகராட்சி இணை ஆணையர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தானேவில் கடந்த 4ஆம் தேதி 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 74 பேர் பலியாயினர்.

##~~##
கட்டிட இடிபாடுகளுககுள் 29 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்த 4 மாத கைக்குழந்தையும், 4 வயது குழந்தையும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த 60க்கும் மே|ற்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கட்டுமானப் ஒப்பந்ததாரர்கள் ஜமில் குரேஷி, சலிம் ஷேக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் ஒருவர் உட்பட 7  பேர் கைது செய்யப்பட்டனர்.