Published:Updated:

நெல்லையில் கால்நடைகளைத் தாக்கும் ஆந்த்ராக்ஸ் நோய்! - 80 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்

நெல்லை மாவட்டத்தில், கால்நடைகளை ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கிவருகிறது. களக்காடு பகுதியில் ஒரே இடத்தில் 80 ஆடுகள் உயிரிழந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அருகில் உள்ள களக்காடு கீழப்பத்தை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், சண்முகம். இவர், சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது பண்ணையில் உள்ள ஆடுகள், கடந்த சில தினங்களாக மர்ம நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்து வந்தன. திடீரென வளர்ப்பு ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால், ஆடுகளுக்கு அவர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தும் அவற்றைக் காப்பாற்ற இயலவில்லை. 

சண்முகத்தின் வளர்ப்பு ஆடுகளில் இன்று மட்டும் 13 ஆடுகள் உயிரிழந்தன. அவர் வளர்த்துவந்த 80 ஆடுகள், கடந்த சில தினங்களில் உயிரிழந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகளை இழந்த நிலையில், அதற்கான காரணம் அறியாமல் அவர் தவித்துவருகிறார். இந்தத் தகவல் வெளியிடங்களிலும் பரவத் தொடங்கியதால், ஆடுகளை வளர்த்துவரும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், நெல்லை மாவட்ட கால்நடைத் துறையினர், களக்காடு பகுதியில் ஆடுகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கின்றனர். அதனால், களக்காடு பகுதிக்கு 4 குழுக்கள் அனுப்பப்பட்டு, கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு மருத்துகளும் ஊசிகளும் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளிடம் நிலவும் அச்சம் குறைந்தபாடில்லை.