Published:Updated:

உடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்!

உடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்!
உடல் நலக்குறைவால் வியட்நாம் அதிபர் காலமானார்!

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த வியட்நாம் அதிபர் த்ரன் தாய் குவாங் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

வியட்நாம் அதிபர் த்ரன் தாய் குவாங் உடல்நலக்குறைவின் காரணமாக இன்று காலை ஹனோவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உயிரிழந்தார். பல கைத்தேர்ந்த மற்றும் சர்வதேச மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்தும் எந்தப் பலனும் இல்லாமல் தன் 61-வது வயதில் உயிரிழந்துள்ளதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வியட்நாம் அதிபர்களில் மூன்றாவது மிக முக்கிய அதிபர் என்ற பெருமையைப் பெற்ற இவர், 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். இவர் சட்டப்படிப்பில் பி.ஹெச்டி முடித்துள்ளார். இதற்கு முன்னதாக 2006 முதல் 2011 வரை வியட்நாம் மக்கள் பாதுகாப்புத்துறையின் துணை அமைச்சராகவும், 2011 முதல் 2016 வரை அதே பாதுகாப்புத் துறையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். அதிபர் த்ரன் தாய் குவாங் கடந்த மார்ச் மாதம் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.