Published:Updated:

கப்பலைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி! - தூத்துக்குடியில் சோகம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் பழைய துறைமுகத்தில் பார்ஜ் எனப்படும் மிதவைக் கப்பலின் அறையை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கப்பலைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி! - தூத்துக்குடியில் சோகம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் பழைய துறைமுகத்தில் பார்ஜ் எனப்படும் மிதவைக் கப்பல்கள் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த `முத்தப்பால்' என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமான மிதவைக் கப்பல் மாலத்தீவிலிருந்து புறப்பட்டு கற்களை ஏற்றிச் செல்வதற்காக தூத்துக்குடி பழைய துறைமுகம் வந்துள்ளது.

இந்த பார்ஜ் கப்பலை வரும் 3.10.18 அன்று ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதால் அதில் உள்ள ஊழியர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மிதவைக் கப்பலின் அறையை சுத்தம் செய்யும் பணியில் தேனியைச் சேர்ந்த  சக்திவேல் மற்றும் சாம் டேவிட் ராஜா ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனையில் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், இவர்களை பார்ஜ் அறையில் இருந்து மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த கப்பலின் ஊழியர் கோபிநாத் என்பவரும் விஷவாயு தாக்கியதில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு