Published:Updated:

மனிதநேய நீதியரசர்!

மனிதநேய நீதியரசர்!
பிரீமியம் ஸ்டோரி
மனிதநேய நீதியரசர்!

மனிதநேய நீதியரசர்!

மனிதநேய நீதியரசர்!

மனிதநேய நீதியரசர்!

Published:Updated:
மனிதநேய நீதியரசர்!
பிரீமியம் ஸ்டோரி
மனிதநேய நீதியரசர்!

னிதாபிமானம், சமூகநீதி, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சிக்கல்கள் என எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு, குறிப்பிடத்தக்கத் தீர்ப்புகளை வழங்கியவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன். சென்னையில் வசித்துவந்த அவர், பிப்ரவரி 28-ம் தேதி மரணம் அடைந்தார். ‘‘நீதித் துறையில் அவர் ஆற்றிய பணிகளும், வழங்கிய தீர்ப்புகளும் என்றென்றும் அவரைப் பேசுபொரு ளாகவே வைத்திருக்கும் என்கிறார் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் பற்றி அவருடைய வார்த்தைகள்... 

‘‘சட்டங்கள், சட்டங்களின் பிரிவுகளை மட்டும் கணக்கில் கொண்டே பல நீதிபதிகள் தீர்ப்பளிக்கின்றனர். நீதித்துறையின் சட்டப்பிரிவு களை கறாராகப் பிடித்துக்கொண்டு வழங்கப்படும் தீர்ப்பில், பல நேரங்களில் மனிதாபிமானம் செத்துப்போகிறது; சமூக நீதி பிறழ்ந்துவிடுகிறது. ஆனால், நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் தீர்ப்புகளில் அந்தப் பிழை என்றும் நேர்ந்ததில்லை. அதுதான் அவருடைய சிறப்பு. அந்த சிறப்புதான் இன்று அவரை சாகாவரம் பெற்ற முன்னுதாரண மனிதராக மாற்றியுள்ளது.

மனிதநேய நீதியரசர்!

குக்கிராமம் ஒன்றிலிருந்து படித்து வந்தவர் அவர். ஏழைகளின் யதார்த்த வாழ்வை அவர்களுடன் இருந்து வாழ்ந்து பார்த்தவர். அதனால், அந்த எளிய மனிதர்களின் சிரமங்கள் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதைக் கருத்தில்கொண்டே அவர் வழக்குகளை அணுகி னார். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட் டத்தின் திருப்புடைமருதூர் எனும் ஊரில் பிறந்து தம் பள்ளிப் படிப்பை அம்பாசமுத்திரத்திலும் கல்லூரிக் கல்வியைத் திருநெல்வேலி தூய சேவியர் கல்லூரியிலும் முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். திருநெல் வேலியில் கிரிமினல் வழக்குகளை நடத்தும் பிரபல வழக்கறிஞராக விளங்கினார்.

பிற்காலத்தில் திரைப்படமாக வெளிவந்த ‘சீவலப்பேரி பாண்டி’யின் அசல் வழக்கை திருநெல்வேலியில் நடத்தியவர் இவரே. தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, அம்பாச முத்திரம் போன்ற பல துணை நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளை நடத்துவதுண்டு.

ரத்தினவேல் பாண்டியன் 1960-களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சீனியர் வழக்கறி ஞராக மட்டுமல்லாமல் நெல்லை தி.மு.க மாவட்டச் செயலாளராகவும் விளங்கினார். அப்போது இவருடைய வழக்கறிஞர் அலுவலகம் திருநெல்வேலி முருகன்குறிச்சியில் இருந்தது. ஆரம்ப காலத்தில் ஒரு ஃபியட் கார் வைத்திருந்தார். அந்தக் காரில்தான் கட்சிப் பணிகளுக்காக கிராமங்களுக்குச் செல்வார். இவரின் ஜூனியர் வழக்கறிஞராக வைகோ இருந்தார். தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களுக்குச் செல்வதானால் வைகோவை அழைத்துக்கொண்டுதான் செல்வார்.

சேரன்மகாதேவி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோற்றபின் சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக 1971-ல் நியமிக்கப்பட்டார். பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்ந்தார். 1988-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்று டெல்லிக்கும் சென்றார். மண்டல் கமிஷன் வழக்கிலும், கர்நாடக அரசை அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைக் கொண்டு கலைத்த எஸ்.ஆர்.பொம்மை வழக்கிலும் விசாரித்து முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர். அரசு ஊழியர்களின் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்காக மத்திய அரசு அமைத்த ஆறாவது ஊதியக்குழுவின் தலைவராக இருந்தவர்.

எந்தப் பதவியில் இருந்தாலும், எளிமையாகவும், பகட்டில்லாமலும் வாழ்ந்து காட்டியவர். சட்டங்கள் ஒருபுறத்தில் இருந்தாலும் மனிதநேயம், நாட்டின் நலன் என்பதையெல்லாம் மனதில் கொண்டுதான் இவருடைய தீர்ப்புகள் இருக்கும்.’’

- ஜோ.ஸ்டாலின்