Published:Updated:

புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை!

புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை!
புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை!
புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை!

புனே: புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹிமாயத் பெய்க்-குக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.
 
கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதியன்று புனேவில் உள்ள பிரபல ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.வெளிநாட்டினர் இங்கு அதிக அளவில் வருவார்கள் என்பதால் அவர்களை குறிவைத்தே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
 
இந்த குண்டுவெடிப்பில் 5 வெளிநாட்டினர் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்;64 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கில், இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த மிர்ஸா ஹிமாயத் பெய்க் என்ற ஒரே ஒருவர் மட்டும்தான் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் தொடர்புடைய எஞ்சியோர் தலைமறைவானார்கள்.
 
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த புனே அமர்வு நீதிமன்றம், ஹிமாயத் பெய்க் குற்றவாளி என கடந்த 15 ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது. தண்டனை தீர்ப்பு 18 ஆம் தேதியன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

##~~##
அதன்ப்டி இன்று தண்டனை தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், ஹிமாயத் பெய்க்-குக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக அறிவித்தது.