Published:Updated:

`பாட்டுக் கேட்டே தூங்கினாள்; காலையில் சடலமாகக் கிடந்தாள்!‍'- சிறுமியின் இறப்பால் கலங்கும் தோழி

கஜகஸ்தானில், தூங்கிக்கொண்டிருந்த 14 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோழியுடன் ஆல்வா
தோழியுடன் ஆல்வா

கஜகஸ்தானின் பாஸ்டோப் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, ஆல்வா அசெட்கிஸி அப்சல்பெக். 14 வயதாகும் இவர், நேற்றிரவு போனில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கப் போனவர், மறுநாள் காலையில் சடலமாக மீட்கப்பட்டார். அதற்குக் காரணம், அவர் தூங்கும்போது போனை தனது தலையணைக்கு அருகில் சார்ஜ் போட்டுக்கொண்டே தூங்கியுள்ளார்.

ஆல்வா அசெட்கிஸி -  அயாசன்
ஆல்வா அசெட்கிஸி - அயாசன்

நீண்ட நேரமாக சார்ஜிலேயே இருந்ததால், போனின் பேட்டரி வெடிக்க, தலையில் காயம் அடைந்து சிறுமி உயிரை விட்டுள்ளார். காலை நீண்ட நேரமாகியும் சிறுமி எழுந்திருக்கவில்லை என்றதும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க, தற்போது அந்தக் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

``ஒரு தடவை சார்ஜ் பண்ணா சேலத்துக்குப் போய்விடலாம்!'' - எடப்பாடியாரை அசத்திய டெஸ்லா கார்கள்!

போலீஸ் விசாரணையிலும், போன் வெடித்து சிறுமி உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவரின் தலையணைக்கு அருகே சார்ஜர் பிளக் போர்டில் இருப்பது தெரியவந்தது. எனினும் அந்த போன் எந்தக் கம்பெனி என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேட்டரி
பேட்டரி

ஆல்வா மறைவால் சோகமடைந்துள்ள அவரது உயிர்த் தோழி அயாசன் டோலாஷேவா என்பவர், ``நீ இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இது ஒரு சோகமான விபத்து. சிறு வயது முதல் ஒன்றாக இருந்தோம். நீ சிறந்தவள். நீ இல்லாமல் என்னால் இயங்க முடியாது. என்னை ஒரேயடியாக விட்டுச் சென்றுவிட்டாய்" என உருக்கமாகப் பேசியுள்ளார்.

Credit: East2west News