Published:Updated:

தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்!

தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்!
தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்!

தண்ணீர் குடித்ததற்காக நாயை அடித்துக்கொன்ற கடைக்காரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வருடம் சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிலர் தெரு நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்து  மனிதாபிமானமற்ற முறையில் சாகடித்தனர். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதி சாலையில் ஒரு நாய் ஒன்று பசியில் வாடியவாறு இருந்துள்ளது. அந்த வழியில் கல்லூரிக்குச் செல்வதற்காகப் பேருந்துக்காக காத்திருந்த அந்தப் பகுதி பெண் ஒருவர் நாயைப் பார்த்ததும் தனது டிபன் பாக்ஸில் இருந்து உணவை எடுத்து நாய்க்கு வைத்துள்ளார். அதை உண்ட நாய் அருகில் இருந்த தெருவோர சாப்பாட்டுக் கடையில் உள்ள தொட்டியில் தண்ணீர் குடித்துள்ளது. 

நாய் தொட்டித் தண்ணீரைக் குடிப்பதைப் பார்த்த கடைக்காரர் ஸ்ரீனு என்பவர் ஆத்திரத்தில் இரக்கமின்றி அந்த நாயை இரண்டு முறை உதைத்து சாலையில் வந்த கார் முன்னால் வேகமாக நாயை வீசி எறிந்தார். இதில் அடிபட்ட அந்த நாய் அங்கேயே உயிரிழந்தது. அங்கிருந்தவர்கள் கடைக்காரரின் கொடூரமான செயலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அதை ஆதாரமாகக் கொண்டு விலங்குகள் நலவாரியம் அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து கஸ்டடியில் வைத்துள்ளனர். கடைக்காரரின் மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.