Published:Updated:

விபத்தில் பலியான காவலர் உள்பட 8 பேருக்கு ரூ.9 லட்சம் நிவாரணம்: ஜெ. அறிவிப்பு

விபத்தில் பலியான காவலர் உள்பட 8 பேருக்கு ரூ.9 லட்சம் நிவாரணம்: ஜெ. அறிவிப்பு
விபத்தில் பலியான காவலர் உள்பட 8 பேருக்கு ரூ.9 லட்சம் நிவாரணம்: ஜெ. அறிவிப்பு

சென்னை: சாலை விபத்தில் பலியான காவலர் உள்பட 8 பேரின் குடும்பங்களுக்கு 9 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை  மாவட்டம், திருப்பாசேத்தி பிரதான சாலையில் கடந்த 14ஆம் தேதி பரமக்குடியிலிருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வீட்டின் மீது மோதியதில், வீட்டின் முன்  நின்று கொண்டிருந்த காந்தி என்பவரின் மகன் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதேபோல், கடந்த 14ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், நென்மேலி கிராமம் அருகே  சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில்,  இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த  நென்மேலி கிராமத்தைச் சேர்ந்த முருகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சாலை விபத்துகளில்  மரணமடைந்த  சிறுவன்  செல்வம், முருகன் ஆகியோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளளார்.

இதே போல், சிவகங்கை  மாவட்டம், திருப்பாசேத்தி பிரதான சாலையில் கடந்த 14ஆம் ஏற்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நான்கு பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

##~~##
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
காவலர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி
தருமபுரி மாவட்டம்,  அரூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த ‘Q’ பிரிவு குற்ற புலனாய்வுத் துறையில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த பஷீர் குடும்பத்துக்கும், சென்னை பெருநகரக் காவல், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணி புரிந்த ஏ.மாசானம் மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  தலா  3 லட்சம்  ரூபாய்  வழங்க உத்தரவிட்டுள்ளார்.