Published:Updated:

ட்ரங்க் பெட்டியால் நான்காம் வகுப்பு மாணவனைக் கொன்ற சகமாணவன்!

ட்ரங்க் பெட்டியால் நான்காம் வகுப்பு மாணவனைக் கொன்ற சகமாணவன்!
ட்ரங்க் பெட்டியால் நான்காம் வகுப்பு மாணவனைக் கொன்ற சகமாணவன்!

தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அரசு பாதுகாப்பு விடுதியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜோசப் (9) உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PC : Sakshi

விடுதியில் தங்கியிருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவருடன் ஜோசப்புக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டையில் கோபமடைந்த மாணவன் அருகிலிருந்த ட்ரங்க் பெட்டியைக் கொண்டு சிறுவனைத் தலையிலும் மற்ற இடங்களிலும் தாக்கி உள்ளார். இதில் அங்கேயே சிறுவன் ஜோசப் மரணமடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சண்டை நடக்கும்போது விடுதி காப்பாளர்கள் யாரும் இல்லை எனவும், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனைப் பார்த்துவிட்டு, விடுதிக் காப்பாளர் போலீஸுக்குத் தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இரு மாணவர்களும் காலையிலேயே மிதிவண்டியில் வெளியே சென்று விட்டனர் எனவும், திரும்பி வந்த பொழுது ஏதோ விஷயத்தில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

மாணவர் மரணமடைந்ததை அடுத்து, அவனது குடும்பத்தினர் மற்றும் மாணவர் அமைப்பினர் விடுதியை முற்றுகையிட்டதால், அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தச் சம்பவத்துக்கு விடுதிக் காப்பாளரின் அலட்சியமின்மையே காரணம் என்று கூறி அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு பலர் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இறந்த மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.