Published:Updated:

சென்னை நீலா பவன் ஓட்டல் கிணற்றில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி (படங்கள்)

சென்னை நீலா பவன் ஓட்டல் கிணற்றில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி (படங்கள்)
சென்னை நீலா பவன் ஓட்டல் கிணற்றில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி (படங்கள்)

சென்னை: சென்னையில் உள்ள நியூ நீலா பவன் ஓட்டல் கிணற்றை தூர்வாரும் போது இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நீலா பவன் ஓட்டல் கிணற்றில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி (படங்கள்)

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ளது நியூ நீலா பவன் ஓட்டல். இந்த ஓட்டலில் உள்ள கிணற்றை 8 மாதங்களுக்கு ஒருமுறை தூர்வாருவது வழக்கம்.

இதேபோல், ஓட்டலில் உள்ள கிணற்றை இன்று வியாசர்பாடியை சேர்ந்த ராபர்ட், பெரம்பூரை சேர்ந்த சேகர் ஆகியோர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை நீலா பவன் ஓட்டல் கிணற்றில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி (படங்கள்)

முதலில் கிணற்றில் ராபர்ட் இறங்கியுள்ளார். நீண்ட நேரம் ராபர்ட் வராததால் சேகர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அவரும் வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

##~~##
சென்னை நீலா பவன் ஓட்டல் கிணற்றில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி (படங்கள்)
அப்போது, இரண்டு பேரும் விஷவாயு தாக்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரின் உடல்களை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் கிரீம்ஸ் சாலையும் ஒன்று. இந்த சாலையில் உள்ள ஓட்டலில் இரண்டு பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு தொழிலாளர்கள் பலியானதைத் தொடர்ந்து ஓட்டலுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
முத்துக்குமார்