சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை, பாகனைக் கொன்ற அதிர்ச்சியில் உறைந்துகிடக்கிறார்கள் பக்தர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், சமயபுரம் கோயிலுக்கு வழங்கப்பட்ட யானை, மசினி. இந்த யானையை ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தைச் சேர்ந்த கஜேந்திரனும், அவரின் மகன் அச்சுதனும் பராமரித்து வந்தனர். வழக்கம்போல, மே 25 காலையில் யானைக்கு அலங்காரம் செய்து, கோயில் கொடிமரம் அருகே அதை நிறுத்தினார் பாகன் கஜேந்திரன். பின்னர், யானையின் அருகில் அவர் உட்கார்ந்த சில நிமிடங்களில் நடந்ததுதான் பெரும் சோகம்.

அச்சுதனிடம் பேசினோம். “யானைக்கு இடதுபுறமாக நான் நின்றிருந்தேன். மறுபுறம் அப்பா உட்கார்ந்திருந்தார்.வெள்ளிக்கிழமை என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. யாரோ ஒருவர், யானையின் வாலைப் பிடித்து இழுத்தார். கோபமான யானை, தும்பிக்கையைச் சுழட்டியது. அதில், கீழே உட்கார்ந்திருந்த அப்பா சிக்கிட்டார். உடனே, அங்கிருந்த பக்தர்களை அப்புறப்படுத்துவதற்குள் அப்பாவை மிதிச்சே கொன்னுடுச்சு மசினி. அப்பாவின் உயிர் போவதை நேரில் பார்த்தது பெரும் கொடுமை” என்றபடி கதறினார்.

கஜேந்திரனின் அண்ணன் தாமோதரன், “என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். எங்கள் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக யானைகளைப் பராமரிக்கும் பணியைச் செய்துவருகிறோம். தம்பி கஜேந்திரன், திருநெல்வேலி, கோயம்புத்தூர் பகுதிகளில் யானைகளைப் பராமரித்து வந்தார். சமயபுரத்துக்கு மசினி யானை வந்தபோது, பாகனாக இருந்த ரவிக்குமாரால் யானையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது, என் தம்பியைப் பாகனாக நியமித்தனர். யானையும் தம்பியை விட்டு ஒரு நிமிடம்கூடப் பிரியாது. ரொம்பப் பாசமாக இருக்கும். இரு முறை முகாமுக்கு அழைத்துப் போனார். பூச்சொரிதல், தீர்த்தமலை, பஞ்ச பிரகாரம் உள்ளிட்ட சமயபுரம் கோயில் விழாக்களில் மசினி பங்கேற்றது. மசினிக்கு ஒன்பது வயது ஆகுது. இங்கு வரும்போது, வெறும் 900 ஆயிரம் கிலோவாக இருந்த யானை, தம்பி வளர்ப்பில் 2.400 டன் ஆக எடை கூடியுள்ளது. அந்தளவுக்குப் பிரியத்துடன் வளர்த்தார். இப்போது, யாரோ செய்த தவறுக்கு அநியாயமாக என் தம்பி பலியாகிட்டார். அவருக்கு நான்கு பிள்ளைகள். அந்தக் குடும்பத்தின் நிலையை நினைத்தால், ரொம்பக் கஷ்டமா இருக்கு. தம்பியின் குடும்பத்துக்கு அரசு உதவனும்” என்றார் கண்ணீருடன்.

சமயபுரம் கோயில் இணை ஆணையர் குமரதுரை, “யானைக்கு மதம் பிடித்ததாகச் சொல்லப்படுவது உண்மையல்ல. யானை கோபமடைந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். அடுத்து யானையைப் பராமரிப்பது யார் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்