Published:Updated:

திருவள்ளூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி (படங்கள்)

திருவள்ளூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி (படங்கள்)
திருவள்ளூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி (படங்கள்)

திருவள்ளூர்: திருவள்ளூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய முயன்ற போது 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி  பரிதாபமாக உயிரிழந்தனர்.
 

திருவள்ளூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி (படங்கள்)

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் பல நாட்களாக நடந்து வருகிறது. தபால் நிலையம் அருகே உள்ள கட்டிட உரிமையாளர்கள் பாதாள சாக்கடை இணைப்பு கேட்டு நகராட்சியிடம் மனு கொடுத்து இருந்தனர்.

திருவள்ளூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி (படங்கள்)

சூப்பர்வைசர் புகழேந்தி தலைமையில் 5 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1.30 மணி அளவில் தபால் நிலையம் அருகே உள்ள பாதாள சாக்கடை மூடியை தொழிலாளர்கள் திறந்து, சாக்கடை ஆழத்தை கணக்கிட கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலாளி திலிப் (25) இறங்கினார்.

நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால், கொல்கத்தாவைச் சேர்ந்த பிந்து (25) என்பவர் சாக்கடைக்குள் இறங்கினார். அவர்கள் இருவருமே வெளியே வராததால் மூன்றாவதாக மேல்மலையனூரைச் சேர்ந்த முருகன் என்பவர் இறங்கினார். அவரும் வெளியே வராததால் மேற்பார்வையாளர் புகழேந்தி, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, கவச உடை அணிந்து சாக்கடைக்குள் இறங்கினர். அப்போது, சாக்கடைக்குள் திலிப், பிந்து, முருகன் ஆகியோர் பிணமாக மீட்டனர்.

##~~##
3 பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  விஷ வாயு தாக்கி 3 பேரும் பலியாகினார்களா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவிமணி