Published:Updated:

மதுரை காந்தி மியூசிய செயலாளர் மாரியப்பன் மறைவு!

மதுரை காந்தி மியூசிய செயலாளர் மாரியப்பன் மறைவு!
மதுரை காந்தி மியூசிய செயலாளர் மாரியப்பன் மறைவு!
மதுரை காந்தி மியூசிய செயலாளர் மாரியப்பன் மறைவு!

மதுரை: பழம்பெரும் காந்தியவாதியும், மதுரை காந்தி மியூசிய செயலாளரும், சர்வோதயா இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவருமான வழக்கறிஞர் மாரியப்பன் இன்று காலை காலமானார். இவருக்கு வயது 75.

அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உடலுக்கு பொதுமக்கள், காந்தியவாதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மறைந்த வழக்கறிஞர் மாரியப்பனை பற்றி நம்மிடம் பேசிய அவரது நண்பர் கே.எம்.நடராஜன், ‘‘மாரியப்பன், மதுரை மணிநகரத்தில்தான் பிறந்தார். மதுரைக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சென்னையில் சட்டம் படித்தார். அப்போது தமிழக எல்லை போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய ம.பொ.சி.யின் தமிழரசு கட்சியில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று ம.பொ.சி. நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

பிறகு, காந்திகிராமம், ஜெகனாதனோடு இணைந்து நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான போராட்டங்களிலும் ஈடுபட்டார். 1969ல் காந்தி நூற்றாண்டு விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் வார்த்தாவிலுள்ள சேவாகிராமத்தில் நடந்தபோது அதில் கலந்து கொண்டார். நில உச்சவரம்பு சம்பந்தமாக இவர் உருவாக்கிய அறிக்கைதான் கருணாநிதி ஆட்சியில் நடைமுறைப்படுத்த பயன்பட்டது.

மதுரை காந்தி மியூசிய செயலாளர் மாரியப்பன் மறைவு!

பூமிதான இயக்கத்தை வினோபாஜி உருவாக்கியபோது அதிலும் இணைந்து செயல்பட்டார். ஜெபியுடனும் நல்ல தொடர்பில் இருந்தார். சர்வோதய டாலிஸ்மேன் பத்திரிக்கையை நடத்தினார். சர்வோதயா புத்தக பண்ணையின் நிர்வாகியாக 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். மகாலிங்கம் மறைவுக்குப் பிறகு, காந்தி மியூசியத்தின் செயலாளராக பொறுப்பேற்றார்.

மதுரை காந்தி மியூசிய செயலாளர் மாரியப்பன் மறைவு!

1964ல் அமெரிக்காவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கு ம.பொ.சி.யுடன் சென்று வந்தார்.  நீண்ட காலம் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு சட்ட ஆலோசகராக இருந்தார். மதுரை மேயராக முத்து இருந்தபோது, மாநகராட்சி வழக்கறிஞராகவும் இருந்தார். பல பிரமுகர்களோடு நட்பில் இருந்தாலும், கடைசி வரை ஒரு காந்தியவாதியாக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்’’ என்றார்.

வெளியில் நடமாட்டத்தை குறைத்துக் கொண்ட வயோதிக நண்பர்களெல்லாம் தங்கள் சிரமத்தை தாங்கிக் கொண்டு அஞ்சலி செலுத்த வந்ததை பார்க்கும்போது, காந்தியவாதி மாரியப்பனின் சிறப்பான வாழ்க்கை எத்தகையது என்பதை நம்மால் காண முடிந்தது.

மதுரையின் முக்கியமான வரலாற்று அடையாளம் காந்தி மியூசியமும், சர்வோதையா புத்தக பண்ணையும். அதில் ஒரு அடையாளமாக வாழ்ந்த வழக்கறிஞர் மாரியப்பனை இழந்து தவிக்கிறார்கள் மதுரை வாழ் பொதுமக்கள்.

செ.சல்மான்

படங்கள்: சிவக்குமார்