Published:Updated:

8 ஆண்டுகளில் 118 வழக்குகளுக்கு உறுதுணை - கோவை காவல்துறை நண்பன் ராஜா மறைவு!

8 ஆண்டுகளில் 118 வழக்குகளுக்கு உறுதுணை - கோவை காவல்துறை நண்பன் ராஜா மறைவு!
8 ஆண்டுகளில் 118 வழக்குகளுக்கு உறுதுணை - கோவை காவல்துறை நண்பன் ராஜா மறைவு!

கோவை காவல் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உறுதுணையாக இருந்த ராஜா என்ற ஆண் நாய் இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.

ராஜா என்றழைக்கப்படும் டாபர் மேன் நாய், கோவை காவல்துறையில் பயங்கர பேமஸ். 2009-ம் ஆண்டு பிறந்த ராஜா என்கிற நாய், 2010-ம் ஆண்டில் கோவை மாநகர காவல் மோப்பநாய் பிரிவில் வாங்கப்பட்டது. சுமார் ஓராண்டு பயிற்சி கொடுக்கப்பட்டது. இதுவரை,118 வழக்குகளை விசாரிக்க உதவியாக இருந்துள்ளது ராஜா. குறிப்பாக, 2012-ம் ஆண்டில் கொலைவழக்கில் குற்றவாளியைப் பிடிக்க மிகவும் உதவி செய்தது. மேலும், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. கடந்த நான்கு மாதம் முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றது.

இந்நிலையில், உடல் நிலை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த ராஜா இன்று உயிரிழந்தது. இதையடுத்து போலீஸார் நாயைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்திலேயே நல்லடக்கம் செய்தனர். ராஜாவின் மறைவு, கோவை மாநகர காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது