Published:Updated:

லட்ச ரூபாய் கடன்... அழிந்துபோன தேக்கு, தென்னை, சவுக்கு, வாழை மரங்கள்... உயிரை மாய்த்த விவசாயி

லட்ச ரூபாய் கடன்... அழிந்துபோன தேக்கு, தென்னை, சவுக்கு, வாழை மரங்கள்... உயிரை மாய்த்த விவசாயி
லட்ச ரூபாய் கடன்... அழிந்துபோன தேக்கு, தென்னை, சவுக்கு, வாழை மரங்கள்... உயிரை மாய்த்த விவசாயி

புதுக்கோட்டையில் கஜா புயல் தாக்கத்தால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

லட்ச ரூபாய் கடன்... அழிந்துபோன தேக்கு, தென்னை, சவுக்கு, வாழை மரங்கள்... உயிரை மாய்த்த விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் திருச்செல்வம். வயது 45. கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கிய கஜா புயலால் இவருக்குச் சொந்தமான தேக்கு, தென்னை, சவுக்கு, வாழை உள்ளிட்ட பணம் கொழிக்கும் மரங்கள் முற்றிலும் அழிந்து போனது. இதை நம்பி பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி விவசாயத்தை செய்து வந்தார். இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மரங்கள்தான் இது. இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமலும், வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்த இனி வழியில்லை என்று மனமுடைந்த திருச்செல்வம்  பூச்சி மருந்து அருந்தினார். இதையறிந்த அவரது குடும்பத்தார் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். இந்த  நிலையில், பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில்  மேல் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.