Published:Updated:

சென்னை போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஊழியர் தற்கொலை

சென்னை போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஊழியர் தற்கொலை
சென்னை போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஊழியர் தற்கொலை

சென்னை: சென்னையில் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி அயோத்திகுப்பத்தைச் சேர்ந்தவர் மணி (53). மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இன்று காலை 5 மணியளவில் வழக்கம் போல் மந்தைவெளி பஸ் டெப்பாவுக்கு பணிக்கு வந்தார்.

##~~##
தனது அறையில் சிறிது நேரம் அமர்ந்து பணிகளை செய்த மணி, நண்பர்கள் சிலரை அழைத்து சென்று டீ வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அலுவலகத்துக்கு திரும்பிய மணி ஏதோ எழுதி கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த அறை கதவை சாத்தி விட்டு மின் விசிறியில் தூக்கு போட்டு மணி தற்கொலை செய்துள்ளார்.
வழக்கமாக அந்த அறை கதவு பணி நேரத்தில் திறந்தே இருக்கும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக வெகுநேரமாக அறை கதவு திறக்காததால் ஊழியர்கள் சென்று கதவை திறந்து பார்த்துள்ளனர். அங்கு அதிகாரி மணி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி பட்டினப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மணி இறப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை மணியின் சட்டைப் பையில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.
பணி சுமைக் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப தகராறு காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.