Published:Updated:

சரப்ஜித் சிங் இந்தியாவின் வீரமகன்: பிரதமர் இரங்கல்

சரப்ஜித் சிங் இந்தியாவின் வீரமகன்: பிரதமர் இரங்கல்
சரப்ஜித் சிங் இந்தியாவின் வீரமகன்: பிரதமர் இரங்கல்
சரப்ஜித் சிங் இந்தியாவின் வீரமகன்: பிரதமர் இரங்கல்

புதுடெல்லி: சரப்ஜித் சிங் இந்தியாவின் வீரமகனாக திகழ்ந்தார் என பிரதமர் மனமோகன் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " சரப்ஜித் சிங் மரணச் செய்தியைக் கேட்டதும் நான் மிகுந்த வருத்தமடைந்தேன். சரப்ஜித் சிங் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க பாகிஸ்தானிடம் இந்திய அரசும், சரப்ஜித் சிங் குடும்பத்தாரும் விடுத்த வேண்டுகோளை பாகிஸ்தான் மனிதாபிமான அடிப்படையில் அணுகவில்லை.

##~~##
சரப்ஜித் சிங் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். சரப்ஜித் சிங் மீது தாக்குதல் நடத்தி அவரின் மரணத்துக்கு கிரிமினல்கள் காரணமாகிவிட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள அரசு முயற்சி செய்யும். வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்காத இந்தியாவின் வீர மகனாகத் திகழ்ந்த அவரின் ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.