தொலைபேசியில் நாம் அவரை அழைத்தாலும் சரி... அவர் நம்மை அழைத்தாலும் சரி... ‘வாழ்க மரங்களுடன்... நான் மரம் பேசுகிறேன்’ என்று கணீர் குரலில் சொல்லிவிட்டுத்தான் பேச்சை ஆரம்பிப்பார். அந்தக் கணீர் குரலை இனி நாம் கேட்க முடியாது. ஆம், அந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான ‘மரம்’ தங்கசாமி, 81 வயது நிறைவுற்ற நிலையில்... கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, இயற்கையோடு கலந்துவிட்டார். ‘மரம் நடு... பிழைத்துக் கொள்வாய், மரம் நடு... கடனில்லாமல் வாழ்வாய், மரம் நடு... மானம் காத்துக் கொள்வாய்’ எனத் தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளிடம் பிரசாரம் செய்து வந்தவர் ‘மரம்’ தங்கசாமி.

விவசாயச் சங்கத்தில் தீவிரமாக இயங்கி, விவசாயிகளின் நடைமுறை பிரச்னைகளைப் பேசியவர் தங்கசாமி. பல ஆண்டுகளுக்கு முன், வங்கியில் வாங்கிய கடனை இவரால் கட்டமுடியவில்லை. வங்கி இவருக்கு ‘ஜப்தி’ நோட்டீஸ் அனுப்ப... உறவினர்கள் பலரும் கைவிரித்துவிட்டனர். அந்நிலையில், இவரது தோட்டத்தில் வரப்போரத்திலும், வேலியோரத்திலும் இருந்த வேப்ப மரங்களும் பிற மரங்களும் தங்களின் உயிரைக் கொடுத்து இவரது மானத்தைக் காத்தன. அன்றிலிருந்து மரங்களின்மீது நன்றிகொண்டு, நன்றி மறவாத மர மனிதனாகவே வாழ்ந்தவர் இவர்.

ஒருமுறை, திருச்சி வானொலியில் ‘மரப்பயிர்களும் பணப்பயிர்களே!’ என்ற பி.எஸ்.மணியன் எழுதிய புத்தகத்தைப் பற்றி உரையைக் கேட்டார். அதன்பிறகு பி.எஸ். மணியனை நேரடியாகச் சந்தித்தபின், தங்கசாமியின் மரம் வளர்ப்பு பற்றிய பார்வை மாறியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி என்ற குக்கிராமத்தில் பிறந்து... ‘ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்’ வெளியிட்ட ஒரு நூலில் அட்டைப்படமாக இவரது புகைப்படத்தை வைக்கும் அளவுக்கு மரத்தால் உயர்ந்தவர், தங்கசாமி.

எந்த மரமாக இருந்தாலும் சரி... கன்று நடவு செய்ததிலிருந்து அதை வளையாமல் நேராக 20 அடி உயரத்துக்கு மேல் வளர்த்தெடுப்பதில், கில்லாடி இவர். எந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டாலும் மரக்கன்று நடாமல் அந்தக் கூட்டத்தை ஆரம்பிக்க விடமாட்டார். அதோடு, ‘அடுத்த முறை நான் இந்த ஊருக்கு வரும்போது இந்த மரம் நல்லா வளர்ந்திருக்கணும். இல்லாட்டி உன் வீட்டு வாசல்ல காலடி எடுத்து வைக்கமாட்டேன்’ என்று உரிமையாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு எச்சரிக்கை விடுப்பார், தங்கசாமி. அவருடைய வீட்டுக்குச் சென்றால், ‘ஒரு கன்னை நட்டுட்டு வா, சாப்பிடலாம்’ என்று சாப்பிட அழைப்பார். ‘கன்னு நட்டாதான் சோறா’ என்று நாங்கள் கேட்டால், ‘மரத்தை நட்டு வளக்காதவன் சோறு திங்கவே தகுதியில்லாதவன்’ என்று பொட்டிலடித்தாற்போலச் சொல்வார்.

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வாரைச் சந்தித்த பிறகு, இருவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கினர். தங்கசாமியின் தோட்டத்துக்கு ‘கற்பகச்சோலை’ என்று பெயர் வைத்தது மட்டுமல்லாமல்... மரம் வளர்ப்புக் குறித்துப் பேசும் போதெல்லாம், ‘புதுக்கோட்டை மாவட்டம், சேந்தன்குடியில் தங்கம் அண்ணன், மரம் வளர்க்கிறாரு...’ என மேற்கோள்காட்டிப் பேசுவதை வழக்கமாகவே வைத்திருந்தார், நம்மாழ்வார்.

மரங்கள் பற்றிய தங்கசாமியின் அறிவும் புரிதலும் மிகப் பெரிது. எந்தப் பதவியில் இருப்பவராக இருந்தாலும் சரி... அவர் மரம் பற்றித் தவறான புரிதலுடன் பேசினால் முகத்துக்கு நேராகவே உடைத்துப் பேசும் தைரியம் கொண்டவர், தங்கசாமி. சுற்றத்தார் பலரும், ‘மரப் பைத்தியம்’ என எள்ளி நகையாடிய போதும், அது குறித்துக் கவலைப்படாமல்... தன் வாழ்வைத் தான் விரும்பியபடி மரங்களின் காதலனாகவே வாழ்ந்தவர், ‘மரம்’ தங்கசாமி.

வீரப்பனுக்காக ஒரு மரம்!

உலகத் தலைவர்களின் பிறந்த நாளாக இருந்தாலும் சரி, நினைவு நாளாக இருந்தாலும் சரி, அன்று அவர்கள் பெயரில் ஒரு மரக்கன்று நடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார், தங்கசாமி. தலைவர்கள் மட்டுமல்லாமல் சந்தனக் காட்டு வீரப்பன் நினைவாகவும் தனது தோட்டத்தில் ஒரு மரத்தை வளர்த்திருக்கிறார். ‘‘அவன் நல்லவனோ... கெட்டவனோ அந்த விவாதத்துக்குள்ள நான் போகலை. ஆனா, வீரப்பன் கொல்லப்பட்டதுக்குப் பின்னால ஆயிரமாயிரம் மரங்கள் தமிழக-கர்நாடகக் காடுகள்ல வெட்டிக் கடத்தப்படுது. அதைத் தடுக்க நாதியில்ல’’ என அந்த மரத்தைக்காட்டி ஆதங்கத்துடன் பேசுவார் ‘மரம்’ தங்கசாமி.