Published:Updated:

`வேதனையைத் தாங்க முடியல' - பெரிய பாண்டியனின் சகோதரரிடம் பேசிய தனிப்படை காவலர்

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனோடு ராஜஸ்தானுக்குக் கொள்ளையனைப் பிடிக்கச் சென்ற காவலர் அம்ரோஸ், `சங்கடமாக இருக்கிறது, வேதனையைத் தாங்க முடியல' என்று பெரியபாண்டியனின் சகோதரரிடம் போனில் கூறியுள்ளார்.

`வேதனையைத் தாங்க முடியல' - பெரிய பாண்டியனின் சகோதரரிடம் பேசிய தனிப்படை காவலர்

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்! கொளத்தூர் கொள்ளை தொடர்பாகக் கொள்ளையன் நாதுராமை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் தலைமையில் தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். பாலி மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் நாதுராம் மற்றும் அவரின் கூட்டாளிகள் பதுங்கியிருக்கும் தகவல் தனிப்படை போலீஸாருக்குத் தெரியவந்தது. கடந்த டிசம்பர் 13-ம் தேதி அதிகாலை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், முனிசேகர் கொண்ட தனிப்படை போலீஸார் நாதுராம் மற்றும் அவரின் கூட்டாளிகளைச் சுற்றி வளைத்தனர். அப்போது முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டாக்கள், பெரியபாண்டியனின் உடலை துளைத்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார்

`வேதனையைத் தாங்க முடியல' - பெரிய பாண்டியனின் சகோதரரிடம் பேசிய தனிப்படை காவலர்

பெரியபாண்டியனின் சடலம், அவரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவர் இறந்து இன்றோடு ஓராண்டாகிவிட்டது. அதையொட்டி முதலாமாண்டு அஞ்சலி அவரின் சொந்த ஊரிலும், மதுரவாயல் போலீஸ் நிலையத்திலும் அனுசரிக்கப்பட்டது. போலீஸ் உயரதிகாரிகள், பொதுமக்கள் அவரின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். பெரியபாண்டியனின் சொந்த ஊரில் அவருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது. அதில் மாவட்டக் கலெக்டர், மாவட்ட எஸ்.பி மற்றும் போலீஸார் பங்கேற்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், கலெக்டரும் மாவட்ட எஸ்.பி-யும் சிலகாரணங்களுக்காகப் பங்கேற்கவில்லை. போலீஸ் துணை கமிஷனர் மற்றும் போலீஸார் பங்கேற்றுள்ளனர்.

`வேதனையைத் தாங்க முடியல' - பெரிய பாண்டியனின் சகோதரரிடம் பேசிய தனிப்படை காவலர்

இதுகுறித்து பெரியபாண்டியனின் சகோதரர் ஜோசப்பிடம் பேசினோம். ``பெரியபாண்டியனின் முதலாமாண்டு அஞ்சலி நிகழ்ச்சி இன்று அனுசரிக்கப்பட்டது. அவரின் மனைவி பானு ரேகா மற்றும் குழந்தைகள் உறவினர்கள், நண்பர்கள், கட்சி பிரமுகர்கள் என அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ராஜஸ்தானுக்கு கொள்ளையன் நாதுராமைப் பிடிக்கச் சென்றவர்களில் ஒருவரான அம்ரோஸ் என்று தன்னை அறிமுகபடுத்தினர். `சார் இறந்து இன்றோடு ஒரு ஆண்டாகிவிட்டது. அவர் இல்லாதது எனக்கு சங்கடமாக இருக்கிறது. வேதனையைத் தாங்க முடியல, அதனால்தான் உங்களுக்குப் போன் செய்தேன்' என்று கண்ணீர்மல்கக் கூறினார். அவருக்கு நானும் எனக்கு அவரும் ஆறுதல் கூறிக்கொண்டோம். ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பெரியபாண்டியன் குடும்பத்தோடு இங்கு வருவார். அவரும் இல்லை. எங்களுக்கு பண்டிகையும் இல்லை" என்றார் கண்ணீர்மல்க.