Published:Updated:

சாதிக் பாட்சா தற்கொலை.. சிபிஐ விசாரிக்கும்: அரசு

சாதிக் பாட்சா தற்கொலை.. சிபிஐ விசாரிக்கும்: அரசு

சென்னை, மார்ச்.16,2011

சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது என தமிழக அரசு இன்று அறிவித்தது. ##~~##

இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் இன்று இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக் பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார்.

இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்தத் தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு