Published:Updated:

விபத்தா... மர்ம மரணமா? - மணல் கொள்ளை புதிர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விபத்தா... மர்ம மரணமா? - மணல் கொள்ளை புதிர்
விபத்தா... மர்ம மரணமா? - மணல் கொள்ளை புதிர்

விபத்தா... மர்ம மரணமா? - மணல் கொள்ளை புதிர்

பிரீமியம் ஸ்டோரி

ருவாய்த் துறையினர், காவல்துறையினர், அரசியல் கட்சியினர், சமூகச் செயல்பாட்டாளர்கள் என மணல்கொள்ளையைத் தடுக்க முயன்ற பலரும் கொலை செய்யப்பட்ட கொடூரம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த வரிசையில் இப்போது, மணல்கொள்ளையைத் தடுக்க முயன்ற விராலிமலை தாசில்தார் பார்த்திபன் விபத்தில் மரணமடைந்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாசில்தாராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மணல்கொள்ளைக்கு எதிராக செயல்பட்டுவந்தார் பார்த்திபன். விராலிமலையை அடுத்த வில்லாரோடை மற்றும் ஆவூர் கோரையாற்றில் மணல் கடத்தப்படுவதாக செப்டம்பர் 29-ம் தேதி நள்ளிரவு தாசில்தார் பார்த்திபனுக்குத் தகவல் வந்துள்ளது. உடனே அவர், வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, குன்னத்தூர் கிராம உதவியாளர் பால்ராஜ், அலுவலக உதவியாளர் மதியழகன் ஆகியோரை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டார்.

விபத்தா... மர்ம மரணமா? - மணல் கொள்ளை புதிர்

மணல்கொள்ளை நடக்கும் பேராம்பூர், ஆலங்குளம், மதயானைப்பட்டி, துலுக்கம்பட்டி பகுதிகளுக்குச் சென்ற பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள், அங்கிருந்து கிளம்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது,  இராஜகிரி குளவாய்பட்டி எனும் இடத்தில் புளியமரத்தின்மீது கார் மோதியதாகச் சொல்லப்படுகிறது. படுகாயமடைந்த பார்த்திபன், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே மரணமடைந்தார். மற்றவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாசில்தார் பார்த்திபன்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வருவாய்த் துறையினர் கூறுகிறார்கள். வருவாய்த் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

“புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர்களின் பெயர்களைச் சொல்லி மணல் கடத்தல் நடக்கிறது. தாசில்தார் பார்த்திபன், மணல் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கையை எடுத்தார். ஜூலை 11-ம் தேதி இரவு, வில்லாரோடை ஆற்றுப் பகுதியில் மணல் கடத்திய எட்டு லாரிகளை மக்கள் சிறைபிடித்தனர். இலுப்பூர் கோட்டாட்சியர் ஜெயபாரதியுடன் அங்கு வந்த பார்த்திபன், மணல் கடத்தலில் ஈடுபட்ட அ.தி.மு.க பிரமுகரும், அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான ராப்பூசலைச் சேர்ந்தவருமான பழனி, அக்கல்நாயக்கன்பட்டி சின்னத்துரை, பாத்திமாநகர் ரத்தினவேல்ராஜா ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வில்லாரோடை மற்றும் கோரையாற்றுப் படுகைகளில் செப்டம்பர் 25-ம் தேதி மணல் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து லாரிகளை கோட்டாட்சியர் ஜெயபாரதி, தாசில்தார் பார்த்திபன் ஆகியோர் பறிமுதல் செய்தனர். ஆனாலும் அதிகாரிகள், போலீஸார் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். கார் டயர் வெடித்ததால்தான் விபத்தில் சிக்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால், இதில் சந்தேகம் உள்ளது. முறையாக விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றனர்.

விராலிமலை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறனிடம் கேட்டதற்கு, “நடந்தது விபத்துதான். ஓட்டுநர் சரவணன்மீது வழக்குப் பதிந்துள்ளோம்” என்றார். யாரேனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால்தான் சந்தேக மரணத்தை போலீஸார் விசாரிப்பார்கள்போல. நேர்மையான வருவாய்த் துறை அதிகாரிகள் அல்லது முன்னாள் அதிகாரிகள் அதைச் செய்ய வேண்டும்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு