Published:Updated:

திருவண்ணாமலையில் ராஜஸ்தான் டிரைவர் எரித்துக் கொலை!

திருவண்ணாமலையில் ராஜஸ்தான் டிரைவர் எரித்துக் கொலை!
திருவண்ணாமலையில் ராஜஸ்தான் டிரைவர் எரித்துக் கொலை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

திருவண்ணாமலையில் ராஜஸ்தான் டிரைவர் எரித்துக் கொலை!

அரியானா மாநிலத்தில் இருந்து கடலூருக்கு 55 புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று கடந்த 1ஆம் தேதி இரவு திருவண்ணாமலை அடுத்த ஐய்யம்பாளையம் ஏரி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது, 5 பேர் கொண்ட கும்பல், லாரி மீது பெட்ரோல் குண்டை வீசியது. இதில் 55 இருசக்கர வாகனங்கள் எரிந்ததோடு, ராஜஸ்தானை சேர்ந்த ஓட்டுநர் ஷாகர்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கிளீனர் ஜபூர்கான் காயமின்றி தப்பினார்.

##~~##
இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர போலீசார், டிரைவர் ஷாகர்கானை மீட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த டிரைவர் ஷாகர்கான் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு சகோதரர் ஜமீனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, வட மாநில டிரைவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கூறி பா.ம.க.வினர் மறியல் போராட்டடத்தில் ஈடுபட்டனர்.
சசிகுமார்