Published:Updated:

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மனமுடைந்த மாணவி தற்கொலை

தர்மபுரி: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி காரிமங்கலம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகள் சுமதி. இவர் அளேதர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து இந்த வருடம் தேர்வு எழுதி இருந்தார்.

##~~##
இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் மாணவி சுமதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த சுமதி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தன் உடலில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டுள்ளார்.
சுமதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் உடனே சுமதியை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே சிகிச்சை பலனின்றி சுமதி இறந்துவிட்டார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
எஸ்.ராஜாசெல்லம்