Published:Updated:

சத்யராஜ் நடித்த படம் ஓடிய திரையரங்கின் மேற்கூறை இடிந்து விழுந்து 3 பேர் பலி!

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில்,சத்யராஜ் நடித்த படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கின் மேற்கூறை இடிந்து விழுந்ததில், மூன்று பேர் அதே இடத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்யராஜ் நடித்த படம் ஓடிய திரையரங்கின் மேற்கூறை இடிந்து விழுந்து 3 பேர் பலி!

திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் முருகன், பாலமுருகன் என்ற இரண்டு பழமையான திரையரங்குகள் உள்ளன. முருகன் திரையரங்கில் கடந்த 10 ஆம் தேதி வெளியான நாகராஜ சேழன் எம்.ஏ. எம்.எல்.ஏ., படம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது..

இந்நிலையில், இன்று முருகன் திரையரங்கில் மதிய காட்சி நடை பெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென திரையரங்கின் மேற்கூறை இடிந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது. இதில் அதே இடத்தில் மூன்று பேர் பலியானார்கள். 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

##~~##
கடந்த சில மாதகாலமாகவே திரையரங்கம் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்களிடையே புகார் எழுந்திருந்தது. இந்நிலையில் தற்போது விபத்து நடந்து மூன்று பேர் பலியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ஏ.சசிகுமார்