Published:Updated:

ரிசல்ட்டுக்காக காத்திருந்த 10ஆம் வகுப்பு மாணவன் பலி; வேலையில் விபரீதம் (படங்கள்)

ரிசல்ட்டுக்காக காத்திருந்த 10ஆம் வகுப்பு மாணவன் பலி; வேலையில் விபரீதம் (படங்கள்)
ரிசல்ட்டுக்காக காத்திருந்த 10ஆம் வகுப்பு மாணவன் பலி; வேலையில் விபரீதம் (படங்கள்)

விருதுநகர்: 10ஆம் வகுப்பு  தேர்வு எழுதி விட்டு விடுமுறையில்  வேலைக்கு சென்ற மாணவன் கட்டிடம் இடிந்து விழுந்து பலியானது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரிசல்ட்டுக்காக காத்திருந்த 10ஆம் வகுப்பு மாணவன் பலி; வேலையில் விபரீதம் (படங்கள்)

விருதுநகர் அருகேயுள்ள குமாரபுரத்தை சேர்ந்த பழனிவாசகன் என்பவரின் மகன் மாரிச்செல்வம் (16). விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாரிச்செல்வம் கோடை விடுமுறையில் வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் விருதுநகர் சூலக்கரையில் உள்ள கே.வி.எஸ்.மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 2வது மாடியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

ரிசல்ட்டுக்காக காத்திருந்த 10ஆம் வகுப்பு மாணவன் பலி; வேலையில் விபரீதம் (படங்கள்)

பள்ளியில் நடந்த கட்டிட வேலைக்கு சென்ற மாரிச்செல்வம் இன்று புதிய கட்டிடத்தில் சென்ட்ரிங் முட்டுக்களை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென்று சென்ட்ரிங் தளம் பிரிந்து மாரிச்செல்வம் மீது விழுந்தது. இதில் சிமெண்ட் கலவை மேலே விழுந்து அமுக்கியதில் மாரிச்செல்வம் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ரிசல்ட்டுக்காக காத்திருந்த 10ஆம் வகுப்பு மாணவன் பலி; வேலையில் விபரீதம் (படங்கள்)

மேலும், பீமராஜ், முனியாண்டி, வெங்கடேஷ், திருவேங்கடம் ஆகிய 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்தி: எம்.கார்த்தி

படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்