Published:Updated:

குஜராத் கலவர வழக்கு: மரண தண்டனை கோரும் மேல் முறையீடு மனு நிறுத்தம்!

குஜராத் கலவர வழக்கு: மரண தண்டனை கோரும் மேல் முறையீடு மனு நிறுத்தம்!
குஜராத் கலவர வழக்கு: மரண தண்டனை கோரும் மேல் முறையீடு மனு நிறுத்தம்!
குஜராத் கலவர வழக்கு: மரண தண்டனை கோரும் மேல் முறையீடு மனு நிறுத்தம்!

அகமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னர் நடைபெற்ற நரோடா பாட்டியா கலவர வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மாயா கொட்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யும் முடிவை நிறுத்தி வைக்க குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னர் நடைபெற்ற நரோடா பாட்டியா கலவரத்தில் 97 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட பா.ஜனதா தலைவர் மாயா கொட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பஜ்ரங் தளத்தை சேர்ந்த பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும், 8 குற்றவாளிகளுக்கு 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 22 குற்றவாளிகளுக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து மாயா கொட்னானி மற்றும் பாபு பஜ்ரங்கி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர்த்தி, அவர்களுக்கு மரண்டத்தண்டனை விதிக்க கோரி மேல் முறையீடு மனு தாக்கல் செய்யுமாறு, இவ்வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு குஜராத் அரசு பரிந்துரைத்திருந்தது.

##~~##
ஆனால் இதற்கு இந்து அமைப்புகள் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அம்முடிவை நிறுத்தி வைத்துள்ளது குஜராத் அரசு.
இது தொடர்பாக குஜராத் சட்டத்துறை அமைச்சகம், அரசின் தலைமை வழக்கறிஞருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்வதை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக குஜராத் மாநில நிதித்துறை அமைச்சர் நிதிஷ் படேல் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.