Published:Updated:

சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

சென்னை: சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

ஆதம்பாக்கம் ஏ.எஸ்.கே நகர் முக்கியச் சாலையில் ஏசுவடியான் என்பவரது கட்டடத்தின் இரண்டவது மாடி கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

இன்று காலை கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 3 பேர் மீது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த பிரேம் குமார், கோவிந்தன், லட்சுமனன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

##~~##
அவர்கள் பிடித்திருந்த கம்பி, அருகில் சென்று கொண்டிருந்த மின்சார ஒயரில் பட்டதால் அவர்களை மின்சாரம் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
உடல்களை ஆதம்பாக்கம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.