Published:Updated:

தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாணவர்கள் சரக்கு ரயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாணவர்கள் சரக்கு ரயில் மோதி பலி
தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாணவர்கள் சரக்கு ரயில் மோதி பலி
தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாணவர்கள் சரக்கு ரயில் மோதி பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு மாணவர்கள் சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.

கண்ணமங்கலம் அடுத்துள்ள மேல்நகர் கோயில் திருவிழா நேற்று நடந்தது. கோயில் திருவிழாவை பார்த்து விட்டு அதிகாலை மூன்றரை மணி அளவில் புதுப்பாளையத்தை சேர்ந்த சேட்டு மகன் ராஜசேகரும், பெரியஜயம்பாளையத்தை சேர்ந்த விநாயகம் மகன் பூபாலனும் வீட்டுக்கு திரும்பினர்.

அப்போது, புதுப்பாளையம் ரயில்வே கிராசிங்கில் தண்டவாளத்தை கடக்க சிறுவர்கள் இருவரும் முயன்றனர். அப்போது, விழுப்புரத்தில் இருந்து காட்பாடி சென்ற சரக்கு ரயில் மாணவர்கள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் துடித்து இறந்தனர்.

##~~##
இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் கூறுகையில், ‘‘மாணவர்கள் ஊருக்கும் திருவிழா நடந்த கோயிலுக்கும் இடையே ஒரு கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. எனவே, கோயிலுக்கு சென்று விட்டு நடந்தே ஊர் திரும்பியுள்ளனர். இருவருக்கும் 17 வயது ஆகிறது. ராஜசேகர் பிளஸ்டூ தேர்வில் பெயில் ஆகி உள்ளார். பூபாலன் 11ம் வகுப்பு படித்தார். இரண்டு பேரின் பெற்றோர்களுமே கூலித் தொழிலாளர்கள். பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடலும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது’’ என்றார்.