Published:Updated:

காற்றுக்காக வீட்டின் முற்றத்தில் தூங்கிய தாத்தா, பேரன் வாகனம் மோதி பலி

காற்றுக்காக வீட்டின் முற்றத்தில் தூங்கிய தாத்தா, பேரன் வாகனம் மோதி பலி
காற்றுக்காக வீட்டின் முற்றத்தில் தூங்கிய தாத்தா, பேரன் வாகனம் மோதி பலி

கிருஷ்ணகிரி: காற்றுக்காக சாலையோரத்தில் இருந்த வீட்டின் முற்றத்தில் தூக்கிய தாத்தா, பேரன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 

காற்றுக்காக வீட்டின் முற்றத்தில் தூங்கிய தாத்தா, பேரன் வாகனம் மோதி பலி

கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை மெயின் ரோட்டில் பெத்ததாலப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் அருகே காமராஜ் நகர் இருக்கிறது. இந்த தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சசிகுமார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லோகேஷ், கிஷோர் என்ற மகன்கள் உள்ளனர்.

தற்போது வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், துரைசாமியும், பேரன் கிஷோரும் காற்றுக்காக வீட்டின் முற்றத்தில் படுத்து தூங்கினர். மற்றவர்கள் வீட்டின் உள்ளே தூங்கினர்.

##~~##
இந்த நிலையில், ஊர் திருவிழாவை வேடிக்கை பார்ப்பதற்காக நள்ளிரவில் வீட்டில் இருந்தவர்கள் துரைசாமியையும், கிஷோரையும் எழுப்புவதற்காக வந்தனர். அப்போது, இருவரும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தனர்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழா நேரத்தில் தாத்தா, பேரன் வாகனம் மோதி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராஜாசெல்லம்