Published:Updated:

ஐபிஎல் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க நடந்த கொடூரம்: 13 வயது சிறுவன் கடத்திக் கொலை!

மும்பை: ஐபிஎல் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்பதற்காக, மும்பையில் 13 வயது சிறுவனைக் கடத்திக் கொலை செய்த எம்.பி.ஏ. மாணவர் உட்பட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் சட்ட விரோத சூதாட்ட பேரத்தில் ஈடுபட்டு 30 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து, மும்பையை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவர் ஹிமான்ஷு ரங்கா, தனது பணக்கார உறவினரின் மகன் ஆதித்யாவை கடத்திச் சென்றான்.

இதற்கு அவனது நண்பரும் உதவியுள்ளான். பிறகு, ஆதித்யாவின் தந்தைக்கு போன் செய்து ரூ.30 லட்சம் பணத்தைக் கொடுத்தால்தான் உங்களது மகனை விடுவிப்போம் என்று மிரட்டியுள்ளான்.

##~~##
இது குறித்து ஆதித்யாவின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். இதனை அறிந்த குற்றவாளிகள், தாங்கள் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் ஆதித்யாவைக் கொலை செய்து எரித்துள்ளனர்.
இதற்கிடையே, ஆதித்யாவின் செருப்பு, ஹிமான்ஷூவின் காரில் இருந்ததைப் பார்த்த சிறுவனின் தந்தை, காவல்துறைக்கு சொல்ல, அவர்கள் குற்றவாளிகளைப் பிடித்து விசாரித்ததில், உண்மை வெளியானது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.